×

வரி விதிப்பில் குளறுபடி நிதியமைச்சர் பதவி பறிப்பு இங்கி.யில் டிரஸ் அதிரடி

லண்டன்: இங்கிலாந்தில் சமீபத்தில் புதிய பிரதமராக பொறுப்பேற்ற லிஸ் டிரஸ், கடந்த மாதம் வரி குறைப்பு நடவடிக்கைகளை எடுத்தார். நிதி அமைச்சர் குவாசி குவாடெங், கடந்த 23ம் தேதி தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ.4.15 லட்சம் கோடி வரி குறைப்பு அறிவித்தார். இது நிதிச்சந்தையில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது. வரிகுறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்பி.க்கள், பிரதமர் லிஸ் டிரஸ்சை  வலியுறுத்தினர். இது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.இந்நிலையில், நிதியமைச்சர் குவாசியை பிரதமர் லிஸ் நேற்று திடீரென பதவி நீக்கம் செய்தார். அதே சமயம், பிரதமர் லிஸ் டிரஸ்க்கு நெருக்கடி கொடுத்து அவரை பதவியில் இருந்து அகற்ற, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த 60 சதவீத எம்பி.க்கள் சதியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னாள் நிதியமைச்சரும் இந்திய வம்சாவளியினருமான சுனக்கை பிரதமராக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது….

The post வரி விதிப்பில் குளறுபடி நிதியமைச்சர் பதவி பறிப்பு இங்கி.யில் டிரஸ் அதிரடி appeared first on Dinakaran.

Tags : LONDON ,Liz Truss ,Prime Minister of ,England ,Dinakaran ,
× RELATED லண்டனில் நடக்கும் நிகழ்ச்சிக்கு...